வியாசர்பாடி நெடுஞ்சாலைகளில் விபத்துகளைத் தடுக்க அதிநவீன ஒளி விளக்குகள்

பெரம்பூர்: வடசென்னை பகுதிக்கு இரவு நேரங்களில் வெளிமாநில சரக்கு லாரிகள் வருகின்றன. குறிப்பாக, எண்ணூர், காசிமேடு, வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளிமாநிலங்களில் இருந்து சரக்கு லாரிகள் வருகின்றன. மேலும் வியாசர் பாடியில் உள்ள குட்செட் பகுதியிலிருந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங் களுக்கு சரக்குகள் அனுப்பி வைக்கப்படுகிறது. மேற்கண்ட பகுதிகளில் மின்விளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டது. இதை தடுக்க புளியந்தோப்பு போக்குவரத்து உதவி கமிஷனர் ராஜா மேற்பார்வையில் வியாசர்பாடி போக்குவரத்து ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் போலீசார் இணைந்து இரவு நேரங்களில் அதிக ஒளியை காட்டக்கூடிய அதிநவீன சுழல் விளக்குகளை பொருத்தும் பணியை வியாசர்பாடி பகுதியில் கடந்த வாரம் தொடங்கினர்.

முதல்கட்டமாக வியாசர்பாடி-எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, வியாசர்பாடி தொழிற்பேட்டை சந்திப்பு ஆகிய இடங்களில் சுழல் விளக்கு பொருத்தப் பட்டது. இதையடுத்து வியாசர்பாடி, கரிமேடு, சர்மாநகர் வியாசர்பாடி மேம்பாலம், அம்பேத்கர் கல்லூரி சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் சுழல் விளக்கு பொருத்தும் பணி நடந்து வருகிறது. இதன்மூலம் வெளிமாநிலங்களில் இருந்து வியாசர்பாடிக்கு வரும் லாரி களால் ஏற்படும் விபத்து தடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>