மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் 47 பேருக்கு கொரோனா

பணகுடி: நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் காவல்கிணறு பகுதியில் தங்கியிருந்து கட்டிட பணி மற்றும் சாலை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிேசாதனையில் 40 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து தொற்று பாதித்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 47 பேரும் பத்தமடையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இவர்கள் தங்கியிருந்த, காவல்கிணறு பகுதியில் கிருமிநாசினி தெளித்து சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Related Stories:

>