கோயம்பேடு மார்க்கெட் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை

அண்ணாநகர்: சென்னை நகரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஒரு பகுதியாக, ஏற்கெனவே வாரத்தின் இரண்டு மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், இன்று கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கொண்டு வருவது தமிழக முதல்வர் தலைமையில் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, இனி வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு முழுமையாக விடுமுறை விடுவது என முடிவெடுத்து அறிவிக்கப்பட்டிருக்கிறது என சிஎம்டிஏ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Related Stories:

>