தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு குறைவு; அடுத்த 3 நாட்களில் தடுப்பூசி தீர்ந்துவிடும் நிலை: தடுப்பூசி செலுத்தும் பணி முடங்கும் ஆபத்து

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு குறைந்து வருவதால் தடுப்பூசி செலுத்தும் பணி முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 3 லட்சம் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில் அடுத்த 3 நாட்களில் தீர்ந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்துக்கு 20 லட்சம் தடுப்பூசிகள் அனுப்புமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும் 1 லட்சம் டோஸ்கள் மட்டுமே வந்து சேர்ந்துள்ளன. நாள் ஒன்றுக்கு 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மத்திய அரசு அனுப்பியுள்ள 1 லட்சம் தடுப்பூசி அரை நாளில் தீர்ந்துவிடும் என்பதால் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு வந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்த இருப்பு இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் பொதுமக்களுக்கும் மருத்துவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியும் முடங்கினால் கொரோனா வைரஸ் பரவல் எல்லை மீறி சென்றுவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

Related Stories: