நாயை ஸ்கூட்டரில் கட்டி இழுத்து சென்ற கொடூரம்: கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் மலப்புரம் அருகே எடக்கரை பகுதியில் நேற்று 2 பேர் ஸ்கூட்டரில் ஒரு நாயை கட்டி இழுத்து சென்றனர். அப்போது நாய் தடுமாறி விழுந்துது. தொடர்ந்து இழுத்து செல்லப்பட்டதால் காயமடைந்தது. இதைக்கண்ட அப்பகுதியினர் அந்த நபரை வழிமறித்தனர். ஆனால் அவர் தொடர்ந்து நாயை இழுத்து சென்றார். சிறிது நேரத்தில் அப்பகுதியினர் திரண்டு அந்த நபரை மடக்கி பிடித்தனர். மேலும் எடக்கரை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் போலீசார் வருவதற்குள் இருவரும் நாயுடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த கொடூர செயலில் ஈடுபட்டவர் சேவியர் என தெரியவந்தது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து சேவியரை தேடி வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். மேலும் இந்த சம்பவம் குறித்து விலங்குகள் நல ஆர்வலர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் சேவியர் வீட்டுக்கு விரைந்து சென்று, ரத்த காயங்களுடன் காணப்பட்ட நாய்க்கு சிகிச்சை அளித்தனர். தலைமறைவாக உள்ள சேவியரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories:

>