மும்பையில் 3 வண்ணங்களில் பாஸ்களை அறிமுகப்படுத்தியது காவல்துறை

மும்பை: சிவப்பு, மஞ்சள், பச்சை என 3 வண்ணங்களில் பாஸ்களை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அத்தியாவசிய சேவைகள் மற்றும் வாகனங்களுக்கு தனித்தனி வண்ணங்களில் பாஸ்களை வழங்க மும்பை போலீஸ் திட்டமிட்டுள்ளது. மருத்துவ சேவையில் உள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும் சிவப்பு நிற பாஸ்கள் வழங்கப்பட உள்ளன. உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு பச்சை நிற பாஸ்கள் விநியோகிக்கப்பட உள்ளன. மின் விநியோகம் உளபட இதர பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு மஞ்சள் நிற பாஸ் வழங்க மும்பை போலீஸ் முடிவு செய்துள்ளது. பாஸ்களை தவறாகப் பயன்படுத்துவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories:

>