கொரோனா பரவல் எதிரொலி மேற்குவங்கத்தில் ராகுல்காந்தியின் தேர்தல் பிரசாரம் ரத்து

புதுடெல்லி: கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், மேற்குவங்கத்தில் ராகுல்காந்தியின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா 2வது அலை காரணமாக நோயாளிகள் அலை அலையாய் மருத்துவமனைகளை நாடிச் செல்கின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியுடன் பேசப் பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது, அவர் மேற்குவங்க தேர்தலுக்கான பரப்புரையில் பிஸியாக இருப்பதாக பதில் வந்தது என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். கொரோனா பரவலுக்கு காரணம், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்றோர்தான் காரணம் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், பிரதமர் மோடி மேற்குவங்க தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும், மக்கள் கொரோனாவால் உயிரிழப்பதை கண்டுகொள்ளவில்லை என்றும் பல்ேவறு எதிர்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், மேற்குவங்கத்தில் நடைபெறவுள்ள 3 கட்ட தேர்தலுக்காக பாஜக தலைவர்கள் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தொற்று தீவிரமான நிலையில் இவ்வாறு தலைவர்கள் பிரசாரம் செய்வதை பலரும் விமர்சனம் செய்கின்றனர். இதற்கிடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த சில நாட்களுக்கு முன் மேற்குவங்கத்தில் பிரசாரம் ெசய்த நிலையில், தற்ேபாதைய கொரோனா நெருக்கடியால் தனது பிரசாரத்தை ரத்து செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘கொேரானா நிலைமையை கருத்தில் கொண்டு, மேற்குவங்கத்தில் எனது அனைத்து தேர்தல் பிரசாரத்தையும் ரத்து செய்கிறேன். தற்போதைய சூழ்நிலையில் பேரணி, பொதுக் கூட்டங்களை நடத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆழமாக அனைத்து அரசியல் தலைவர்களும் சிந்திக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: