மயிலாடுதுறை அருகே குழாய் உடைப்பை சரி செய்யாததால் 6 மாதமாக குடிநீர் வீணாகும் அவலம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கடந்த 6 மாதகாலமாக 24 மணிநேரமும் தொடர்ந்து வெளியேறி வாய்க்காலில் கலக்கிறது. இதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை அருகே மணல்மேடு வில்லியநல்லூர் பாதையில் உள்ள பாலாகுடி வாய்க்கால் ஓரம் 5 அடி ஆழத்தில் தண்ணீர் கசிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள மண்ணை கரைத்து குடிநீர்பைப் வெளியே தெரிகிறது. அந்த பைப்பிலிருந்து 24 மணி நேரமும் குடிநீர் வெளியேறுகிறது. வெளியேறும் அந்த நீர் அருகில் உள்ள பாலாக்குடி வாய்க்காலில் பாய்ந்து பல கி.மீ தூரம்வரை செல்கிறது. இந்தக்குடிநீர் மணல்மேடு அருகே செல்லும் கொள்ளிடம் ஆற்றிலிருந்து மயிலாடுதுறையை நோக்கி கொண்டுசெல்லப்படும் குடிநீர் என்று அப்பகுதி மக்களும், குடிநீர் வடிகால் வாரியத்தால் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக எடுத்துச்செல்லப்படும் குடிநீர்தான் என்றும் கூறுகின்றனர். வில்லியநல்லூர் ஊராட்சிக்குக் கொண்டுசெல்லும் குடிநீர் என்றும் கூறப்படுகிறது.

எந்தத் துறையினர் இந்த நீரை எடுத்துச்சென்றாலும் சுத்தமான கொள்ளிடம் குடிநீர் கடந்த 6 மாதகாலமாக வெளியேறி வாய்க்காலில் பாய்ந்து வீணாகிறது. வாட்டர் கேன் ரூ.30 என்று விலைக்கு வாங்கிவரும் இந்த நேரத்தில் இதுபோன்ற நல்ல தண்ணீர் யாருக்கும் உபயோகம் இல்லாமல் விழலுக்குப் பாய்கிறது வேதனை அளிக்கிறது. உடனடியாக பாலாகுடி பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள பாலாக்குடி வாய்க்காலில் கலக்கும் இந்த குடிநீர் எங்கே செல்கிறது. எந்த துறையினர் இதை பராமரிக்கவேண்டும் என்று கண்டுபிடித்து உடனடியாக சரிசெய்யவேண்டும் என்று பாலாகுடி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தண்ணீர் தொடர்ந்து வெளியேறி வருவதை வீடியோவாக எடுத்து அப்பகுதி மக்கள் வலைதளங்களில் விட்டுள்ளனர், அதுவும் வைரலாகிவருகிறது.

Related Stories:

>