வரத்து அதிகரிப்பால் வெல்லம் விலை உயர்வு: உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

ஈரோடு: ஈரோடு அடுத்த சித்தோட்டில் நேற்று கூடிய வெல்ல மார்க்கெட்டில் கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் வெல்லத்தின் வரத்து அதிகரித்திருந்தது. இதில், நாட்டு சர்க்கரை 2,400 மூட்டையும், உருண்டை வெல்லம் 6,800 மூட்டையும், அச்சு வெல்லம் 800 மூட்டையும் வரத்தானது. இதில், நாட்டுச்சர்க்கரை சிப்பம் ரூ.1,000 முதல் ரூ.1,120 வரையும், உருண்டை வெல்லம் ரூ.1,050 முதல் ரூ.1,180 வரையும், அச்சு வெல்லம் ரூ.1,120 முதல் ரூ.1,230 வரை என்ற விலையில் விற்பனையானது. வெல்லத்தின் வரத்து அதிகரித்ததால், மூட்டைக்கு ரூ.30 முதல் ரூ.45வரை விலை உயர்ந்து காணப்பட்டதால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்ததாக மார்க்கெட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>