புதுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்தில் 3 சிசிடிவி கேமராக்கள் பழுது: திமுக வேட்பாளர் புகார்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்தில் 3 சிசிடிவி கேமரா வேலை  செய்யவில்லை என்று திமுக வேட்பாளர் ரகுபதி எம்எல்ஏ புகார் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, அறந்தாங்கி, விராலிமலை, திருமயம், ஆலங்குடி, கந்தர்வகோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிக்கான  வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குஎண்ணும் மையமான புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மத்திய தொழில் பாதுபாப்புபடை உள்ளிட்ட மூன்று அடுக்கு  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  பாகாப்பு பணிகளை தினமும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வாக்கு எண்ணும் மையம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்து திருமயம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை திமுக வேட்பாளரும் தற்போதைய எம்எல்ஏவுமான ரகுபதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்த கட்டிடத்தின் பின்பக்கம் உள்ள சிசிடிவி கேமரா வேலை செய்யாமல் இருந்துள்ளது. இதனையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் உமாமகேஸ்ரியை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி: சிசிடிவி கேமரா பதிவை நாங்கள் ஆய்வு செய்தோம். அதில் மூன்று கேமராக்கள் வேலை செய்யவில்லை. இந்த மூன்று கேமராவும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் பின்புறத்தில் உள்ளவை. இதனால் பின்பக்க வழியாக வந்து அதிமுக, பாஜகவினர் தேர்தல் அதிகாரிகள் துணையோடு வாக்குப்பெட்டிகளை மாற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது. உடனடியாக மாவட்ட ஆட்சியர் சிசிடிவி கேமரா முறையாக இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றார்.

Related Stories: