மேகாலயா முன்னாள் ஆளுநருக்கு கொரோனா கோவையில் சிகிச்சை

கோவை: தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த வி.சண்முகநாதன் (71) மேகாலயா ஆளுநராக கடந்த 2015 முதல் 2017 வரை பதவி வகித்து வந்தார். பின்னர் அவர் கோவையில் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அவர் கோயில்பாளையத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோயில்பாளையம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories:

>