திருச்சி அரசு மருத்துவமனையில் கோவேக்சின் தடுப்பூசி தீர்ந்தது: இன்று முகாம் இல்லை

திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் கோவேக்சின் தடுப்பூசி தீர்ந்துவிட்டது. இதனால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டம் முழுவதும் முகாம் கிடையாது என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. திருச்சியில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா முகாம், தடுப்பூசி திருவிழா போன்றவற்றால் நேற்று முன்தினம் ஒரே நாளில் அதிகபட்சமாக 12,800 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் சென்னை மருத்துவ கிடங்கிலிருநது திருச்சிக்கு அனுப்பப்படுகிறது. கடந்த வாரம் 40 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தது. அதனடிப்படையில் தடுப்பூசிகள் அடுத்தடுத்த வாரங்கள் அனுப்பப்படுகிறது.

இந்நிலையில், அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் கோவேக்‌சின் தடுப்பூசி தீர்ந்துவிட்டது. இதனால் 2வது டோஸ் தடுப்பூசி போடவரும் மக்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.  கோவிஷீல்டு குறைந்த அளவில் மீதி இருக்கலாம் என்கின்றனர். மேலும் 70ஆயிரம் தடுப்பூசிகள் கோரப்பட்டுள்ளது. ஆனால் சென்னையிலே தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் உடனே வருவது சிக்கல்தான் என ஒரு தரப்பில் கூறப்படுகிறது. மேலும் ஞாயிற்றுகிழமையான இன்று தடுப்பூசி போடப்படாது என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

Related Stories: