அதிமுகவினர் திடீர் மாயம் கொமதேக ஈஸ்வரன் சந்தேகம்

திருப்பூர்: திருப்பூர் குமார்நகரில் உள்ள கொமதேக அலுவலகத்தில் நடந்த தீரன் சின்னமலை 266வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற கொமதேக தலைவர் ஈஸ்வரன் பேசியதாவது: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதிமுக சார்பில் எந்த ஒரு நபரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடவில்லை. இதுபெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஏதோ சதி இருப்பது போல தெரிகிறது என்றார்.

Related Stories:

>