பைக்கில் பின்னால் சென்றவர் பலி: ஹெல்மெட் அணியாததால் நஷ்டஈட்டை குறைக்கக்கூடாது: கேரள ஐகோர்ட் உத்தரவு

திருவனந்தபுரம்:‘கேரள   மாநிலம், மலப்புரம் அருகே உள்ள திரூர் பகுதியை சேர்ந்தவர் முகமது குட்டி. இவர்,  கடந்த  2007, ஆகஸ்ட் 8ம் தேதி உறவினரின் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றார்.  அப்போது, திசைமாறி வந்த ஜீப் ஒன்று பைக் மீது மோதியது. இதில் முகமது குட்டி இறந்தார்.  இதையடுத்து,  நஷ்டஈடு கோரி திரூர் மோட்டார் வாகன தீர்ப்பாணையத்தில் முகமது குட்டியின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். அதில், 2.50 லட்சம் நஷ்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால், முகமது குட்டி ஹெல்மெட் அணியாததால், நஷ்டஈடு  தொகையில் 20 சதவீதம்  குறைக்கப்பட்டது. இதை எதிர்த்து முகமது  குட்டியின் குடும்பத்தினர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தனர்.  

இதுபோல்,  நஷ்டஈடு வழங்கக் கூடாது என  நேஷனல் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனமும் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தது. இந்த இரு மனுக்களும் நீதிபதி குஞ்சு  கிருஷ்ணன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,  ‘ஹெல்மெட் அணியாததால் நஷ்டஈட்டை குறைக்கக் கூடாது.  ஆனால், இத்தீர்ப்பை வைத்து ஹெல்மெட் போடாமல் இருச்சக்கர வாகனத்தில் பயணிக்கலாம் என யாரும் நினைக்கக் கூடாது.மோட்டார் வாகன சட்டம்  129ன்படி, இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்.’ என தீர்ப்பு அளித்தார்.

Related Stories:

>