சில்லி பாயின்ட்...

* மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

* ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 87 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் இந்திய வீரர் ரவி குமார் தாஹியா தங்கப் பதக்கத்தை தக்கவைத்துக் கொண்டார். நட்சத்திர வீரர் பஜ்ரங் பூனியா (65 கி.), காயம் காரணமாக இறுதிப் போட்டியில் இருந்து விலக நேர்ந்ததை அடுத்து வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தார்.

* இத்தாலியில் எமோலா நகரில் நடைபெறும் எமிலியா ரோமாக்னா கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தின் பிரதான சுற்றில் முதலாவதாக இருந்து தொடங்கும் போல் பொசிஷனை மெர்சிடிஸ் வீரர் லூயிஸ் ஹாமில்டன் பெற்றுள்ளார். அவர் 99வது முறையாக போல் பொசிஷன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்திய மகளிர் ஹாக்கி அணி முன்னணி வீராங்கனைகள் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய மையத்தில் மீண்டும் பயிற்சியை தொடங்க உள்ளனர்.

* கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால தனிமைப்படுத்தலில் இருந்த ஆர்சிபி ஆல் ரவுண்டர் டேனியல் சாம்சுக்கு மீண்டும் நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என நெகடிவ் முடிவு வந்துள்ளதை அடுத்து அணியினருடன் இணைந்தார்.

Related Stories:

>