16ம் தேதி 2,01,495 பேருக்கு தடுப்பூசி: இப்போது 1,13,349 பேருக்கு மட்டுமே தடுப்பூசி

சென்னை: தமி­ழ­கத்­தில் தடுப்­பூசித் திரு­விழா நடத்தி அதி­கம் பேருக்குத் தடுப்­பூசி போட தமி­ழக சுகா­தா­ரத்­துறை ஏற்­பாடு செய்­தது. 5,000க்கு மேற்­பட்ட மையங்­களில் கொரோனா தடுப்­பூசி செலுத்­தப்­பட்டு வரு­கிறது. கடந்த இரண்டு நாட்களாக 2 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.  கடந்த 15ம் தேதி 2,17,666 பேருக்கும், 16ம் தேதி 2,01,495 பேருக்கும் என தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் நேற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி செலுத்த மக்கள் ஆர்வம் காட்டவில்லை. அதனால் நேற்று 1,13,349 பேர் மட்டும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதையடுத்து நேற்று வரை 47,05,473 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். மேலும் கடந்த 16ம் தேதியை விட நேற்று 88,146 பேர் குறைவாக தடுப்பூசி எடுத்துக் கொண்டனர்.

Related Stories:

>