விவேக் மறைவு இளையராஜா இரங்கல்

சென்னை: நடிகர் விவேக் மறைவு குறித்து இசை அமைப்பாளர் இளையராஜா நேற்று இரவு வெளியிட்ட வீடியோவில், ‘விவேக் மறைவு என்னை மிகவும் துக்கத்தில் ஆழ்த்திவிட்டது. அதிலிருந்து மீண்டு வர முடியாமல் மனது அதில் ஆழ்ந்துவிட்டது. காரணம், விவேக் என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்திருந்தவர். கல்லூரி காலத்தில் எனக்கு ரசிகராக இருந்து, பின்னாளில் பக்தனாக மாறியவர். சமீபத்தில் என்னை சந்தித்து, தான் செய்து வரும் காரியங்கள் குறித்து பேசி, என்னிடம் அனுமதி பெற்று சென்றார். இந்த அளவுக்கு அன்பு செலுத்தும் ரசிகரை இனி பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. இந்த துக்கத்தில் இருந்து அவரது குடும்பத்தினர் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார். நடிகை நயன்தாராவும் விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>