இடைத்தேர்தல் நடந்த திருப்பதி மக்களவை தொகுதியில் மோதல்: குறைந்த வாக்குப்பதிவு

திருப்பதி: திருப்பதி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் 54.99 சதவீதம் வாக்குகள் பதிவானது. ஆந்திர மாநிலம், திருப்பதி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெற்றது. ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் குருமூர்த்தியும், தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பனபாகலட்சுமி, பாஜ- ஜனசேனா கூட்டணி சார்பில் கர்நாடக முன்னாள் மாநில தலைமை செயலாளர் ரத்னாபிரபா மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சிந்தாமோகன், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் யாதகிரி உள்ளிட்ட 28 பேர் போட்டியிட்டனர். நேற்று காலை முதலே வாக்குப்பதிவுகள் குறைவாகவே இருந்தது. காலை 11 மணிக்கு மேல் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தது. மாலை 5 மணி நிலவரப்படி 54.99 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதில், 9 லட்சத்து 40 ஆயிரத்து 678 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். திருப்பதியில் போலி வாக்காளர்கள் வந்து வாக்களித்ததாக தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories:

>