ஜம்முவில் வாகனம் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் பெண் காயம்

ஸ்ரீநகர்: ஜம்முவில் நிற்காமல் சென்ற வாகனத்தின் மீது பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் காயமடைந்தார். ஜம்மு காஷ்மீரில் உள்ள அவந்திபோரா பகுதியில் நேற்று வழக்கமான வாகன சோதனையில் போலீசாரும், ராணுவ வீரர்களும் ஈடுபட்டனர். மாலை 3.15 மணியளவில் வந்த வாகனம் ஒன்று, சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி நாசர் உல்லாவின் மீது மோதி விட்டு நிற்காமல் வேகமாக சென்றது. இதனால், எச்சரிக்கையான பாதுகாப்பு படையினர் வாகனத்தைத் துரத்தி சென்றனர். படகம்போரா பாலத்தின் மீது வாகனம் சென்றபோது துப்பாக்கிச்சூடு நடத்தப் போவதாக வீரர்கள் எச்சரித்தனர். ஆனாலும், அந்த வாகனம் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால், வாகனத்தின் மீது வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், காரில் இருந்த பெண்ணின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. காரை ஓட்டிய ஜுனைத் தாரிக் தர் என்பவன் கைது செய்யப்பட்டான். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories:

>