எரிபொருள் நிரப்பும் பம்ப் பிரச்னை: 78,000 கார்களை திரும்ப பெறுகிறது ஹோண்டா

புதுடெல்லி: ஹோண்டா கார் நிறுவனம் கடந்த ஜனவரி 2019  செப்டம்பர் 2020க்கு இடைப்பட்ட கால கட்டத்தில் தயாரித்து விற்பனை செய்த 77,954 அமேஸ், லாஸ்ட் ஜெனரேஷன் சிட்டி, ஜாஸ், டபிள்யூஆர்-வி, சிவிக், பிஆர்-வி மற்றும் சிஆர்-வி ரக கார்களில் எரிபொருள் நிரப்பும் பம்ப் பிரச்னை இருப்பதால் திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளது. இந்த ரக கார்களை உடனடியாக ஸ்டார்ட் செய்வதில் பிரச்னை அல்லது திடீரென இன்ஜின் பழுதாகும் வாய்ப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த கார்களை விற்ற அதிகாரப்பூர்வ டீலர்கள் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு இப்பிரச்னை குறித்து விளக்கி கார்களை இலவசமாக மாற்றி கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.

இதற்கு தகுதியான வாடிக்கையாளர்கள் தங்களின் காருக்கு என்று வழங்கப்பட்டிருக்கும் 17 இலக்க எண்ணெழுத்து கொண்ட வாகன அடையாள எண்ணை நிறுவனத்தின் இணையதளத்தில் அதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள மைக்ரோசைட் பகுதியில் பதிவு செய்யும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர். இதில், அமேஸ் (36,086) பிரீவியஸ் ஜெனரேஷன் ஹோண்டா சிட்டி (20,248) டபிள்யூஆர்-வி (7,871), ஜாஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் (6,235), சிவிக் செடன் (5,170). பிஆர்-வி (1,737) என கடந்த 2019 ஜனவரி முதல் அக்டோபர் வரை தயாரான கார்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்ப பெறுகிறது.

Related Stories: