×

ஹெல்மெட் அணியாததால் நஷ்ட ஈட்டு தொகையை குறைக்கக்கூடாது: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: ஹெல்மெட் அணியாததால், வாகன விபத்து வழக்கில் நஷ்ட ஈட்டு தொகையை குறைக்கக்கூடாது எனகேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரளா  மாநிலம் மலப்புரம் அருகே திரூர் பகுதியை சேர்ந்தவர் முகமது குட்டி. இவர் கடந்த  2007 ஆகஸ்ட் 8ம் தேதி, உறவினரது பைக்கில் பின்னால் அமர்ந்து ெசன்று கொண்டிருந்தார். அப்போது திசைமாறி வந்த ஜீப் ஒன்று பைக் மீது மோதியது. இந்த விபத்தில் முகமது குட்டி பரிதாபமாக இறந்தார்.  இதையடுத்து நஷ்ட ஈடு கோரி திரூர் மோட்டார் வாகன தீர்ப்பாணையத்தில்  உறவினர்கள் வழக்கு தொடர்ந்தனர். அதன்படி ₹2.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க  தீர்மானிக்கப்பட்டது. ஆனால் முகமது குட்டி ஹெல்மெட்அணியாததால், நஷ்ட ஈட்டு தொகையில் 20 சதவீதம்  குறைக்கப்பட்டது.

இதை எதிர்த்து முகமது குட்டியின் உறவினர்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு ெதாடர்ந்தனர். இதுபோல  நஷ்ட ஈடு வழங்கக்கூடாது என ேநஷனல் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனமும்  உயர்நீதிமன்றத்தில் அப்பீல் ெசய்தது. இந்த இரு மனுக்களும் நீதிபதி குஞ்சு கிருஷ்ணன் முன் விசாரைணக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘ஹெல்ெமட் ேபாடவில்ைல என்பதற்காக நஷ்ட ஈட்டு தொகையை குறைக்கக்கூடாது. ைபக்ைக ஓட்டியவரோ, பின்  இருக்ைகயில் அமர்ந்திருந்தவரோ ஹெல்மெட் ேபாடாததால் இந்த விபத்தும், இறப்பும் ஏற்படவில்லை. திசைமாறி வந்த வாகனம் ேமாதி  விபத்து நடந்துள்ளது. எனவே இந்த விபத்தில் ஹெல்ெமட் போடாததை ஒரு குற்றமாக கருத வேண்டியது இல்லை.

ஆனால் இந்த தீர்ப்ைப ைவத்துக்ெகாண்டு, ஹெல்மெட் ேபாடாமல் இருச்சக்கர வாகனத்தில் பயணிக்கலாம் என நினைக்கக்கூடாது. ேமாட்டார் வாகன சட்டம்  129ன்படி, ைபக்குகளில் 2 ேபருக்கு ேமல் ெசல்லக்கூடாது. இருவரும் ஹெல்மெட் அணிய ேவண்டும். இந்த சட்டத்தின்படி அதிகாரிகள் கண்டிப்பாக நடவடிக்ைக எடுக்க வேண்டும்’ என தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Supreme Court of ,Kerala , Compensation for not wearing a helmet should not be reduced: Kerala High Court orders
× RELATED சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் 19ஆம் தேதி விடுமுறை!