பண்ணாரி அருகே கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கும் காட்டு யானைகள்: வாகன ஓட்டிகள் பீதி

சத்தியமங்கலம்: பண்ணாரி அருகே கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கும் காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர். சத்தியமங்கலம்  புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டு  மாடு உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள்  வசிக்கின்றன. வனப்பகுதியில்  தற்போது கடுமையான வறட்சி நிலவுவதால், வனவிலங்குகள் குடிநீர் மற்றும் தீவனம் தேடி வனப்பகுதி சாலையோரம் சுற்றித்திரிகின்றன. இந்நிலையில், நேற்று  சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அருகே புதுக்குய்யனூர்  பிரிவு என்ற இடத்தில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையை கடந்து சென்றன.

அப்போது அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் யானைகள் சாலையை கடந்து செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்து வாகனங்களை நிறுத்தினர். யானைகள் மற்றொரு வனப்பகுதிக்கு சென்றபின் புறப்பட்டுச் சென்றனர். பகல் நேரங்களில் காட்டு யானைகள் சாலையை கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன்  வாகனங்களை இயக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Related Stories:

>