வேட்டங்குடி சரணாலயத்தில் நாய்கள் மூலம் வேட்டையாடப்படும் பறவைகள்

சிங்கம்புணரி: வேட்டங்குடி சரணாலயத்தில் நாய்கள் மூலம் பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்குள்ல மரங்களில் அரிவாள் மூக்கன், நத்தை கொத்தி, பாம்பு தாரா, நீலச்சிரவி, உன்னி தின்னும் கொக்கு, கரண்டிவாயன் உள்ளிட்ட ஏராளமான வெளிநாட்டு பறவைகள் கூடுகட்டி வசித்து வருகின்றன. பறவைகளுக்காக இப்பகுதி மக்கள் தீபாவளி உள்ளிட்ட எந்த விசேஷங்களுக்கும் பட்டாசு வெடிப்பதில்லை.

அக்டோபர் முதல் பிப்ரவரி வரை இனப்பெருக்கத்திற்காக வரும் வெளிநாட்டு பறவைகளை பார்ப்பதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில், சிலர் நாய்களை தண்ணீரில் இறக்கி பறவைகளை வேட்டையாடி வருகின்றனர். இதனால் பறவைகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பறவைகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: