திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று தமிழக சீருடை பணியாளர் தேர்வு தேதி ஒத்திவைப்பு

சென்னை: தமிழக சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்தும் 2020-ம் ஆண்டுக்கான இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்காக பொதுத்தேர்வு தொடப்பாக 21.04.2021 முதல் நடத்தப்படவுள்ள சான்றிதழ்கள் சரிபார்த்தல் உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு மற்றும் உடற்திறன் போட்டித் தேர்வுகள் சில நிர்வாக காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது. இத்தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பாக நடைபெறவுள்ள தேர்வினை கொரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தன்மை குறையும் வரை ஒத்திவைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில் இத்தேர்வினை நடத்துவது என்பது கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கவே அதிக வாய்ப்பினை உருவாக்கும் என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். திருமணங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், இத்தேர்வினை ஒத்திவைப்பதே சரியான முடிவாக இருக்கும். எனவே இந்த உடற்தகுதி தேர்வினை, இரண்டாம் அலையின் தீவிரத்தன்மை குறையும் வரை ஒத்திவைக்க வேண்டும் எனத் தமிழக அரசையும், தேர்தல் ஆணையத்தையும் கேட்டுக் கொள்கிறேன் என கூறியிருந்தார். 

Related Stories: