நடிகர் விவேக் திரையிலும் வாழ்விலும் சுற்றுச்சூழல், சமூக சிந்தனையைக் கொண்டவர்: பிரதமர் மோடி புகழாரம் !

சென்னை: நடிகர் விவேக் மறைவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் விவேக்கின் திடீர் மரணம் பலரை வேதனையடையச் செய்துள்ளது. நடிகர் விவேக்கின் மறைவு தமிழ் சினிமா உலகையே உலுக்கியுள்ளது. அவரது நடிப்பை அனைவரும் பாராட்டினாலும் அவர் இயற்கை மீது கொண்டிருந்த காதலை யாராலும் பாராட்டாமல் இருக்க முடியாது. யாரிடமும் இல்லாத சமூக அக்கறையும் இயற்கை ஆர்வமும் விவேக்கிடம் இருந்ததாக அவரோடு நெருங்கிப் பழகிய பலரும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இவரது மறைவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் விவேக்கின் திடீர் மரணம் பலரை வேதனையடையச் செய்துள்ளது. விவேக்கின் நகைச்சுவை நடிப்பும், வசன உச்சரிப்பும் மக்களை மகிழ்வித்தன. நடிகர் விவேக் நடித்த படங்கள், சொந்த வாழ்க்கை மூலம் சுற்றுச்சூழல், சமூகம் குறித்த கருத்தை வெளிப்படுத்தியவர். மேலும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இலங்கை எம்.பி. வேலுசாமி ராதாகிருஷ்ணன் நடிகர் விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். சிரிக்கவும்ஜ் சிந்திக்கவும் வைத்த நடிகர் விவேக்கின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>