தெலங்கானாவில் முதல்வர் ஆவேன்: ஜெகன் மோகன் சகோதரி சூளுரை

ஐதராபாத்: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா. இவர் தெலங்கானாவில் உள்ள 1.91 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஐதராபாத்தில் உள்ள இந்திரா பூங்காவில் நேற்று ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தார்.  அவரது ஆதரவாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். உண்ணாவிரதத்தை அனுமதிக்க முடியாது என்று கூறிய காவல்துறை, சர்மிளாவை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியது.

ஆவேசமடைந்த சர்மிளா, ‘‘எனது தந்தை ராஜசேகர ரெட்டியின் பிறந்த தினமான ஜூலை 8ம் தேதி அரசியலில் குதிப்பேன். அன்று பிரம்மாண்ட பேரணி நடத்தி கட்சியின் கொடி, சின்னம் அறிவிப்பேன். 2023ம் ஆண்டில் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியையும் கைப்பற்றி முதல்வர் ஆவேன்,’’ என்று சூளுரைத்தார்.

Related Stories:

>