அமெரிக்காவில் கூரியர் நிறுவனத்தில் 8 பேர் சுட்டுக்கொலை

இன்டியானாபோலிஸ்: அமெரிக்காவின் இன்டியானாபோலிஸ் நகரில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஒபாமா அதிபராக இருந்த போது துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்த புதிய சட்டத்தைக் கொண்டுவர முயற்சித்தார். ஆனால், அவரால் கொண்டு வர முடியவில்லை. துப்பாக்கி கலாசாரத்தைக் கட்டுப்படுத்த புதிய சட்ட நடவடிக்கைகள் விரைவில் அமல்படுத்தப்படும் என்று அதிபர் ஜோ பைடன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்தார்.  

இந்நிலையில், இன்டியானாபோலிஸ் நகரில் பெடக்ஸ் கூரியர் நிறுவன வளாகத்தில் நேற்று முன்தினம் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 4 பேர் காயமடைந்தனர். இவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. மற்ற இருவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இது குறித்து மாநகர போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஜெனே குக் கூறுகையில், ``துப்பாக்கிச்சூடு காயங்களுடன் இருந்த பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தன்னை தானே சுட்டு கொண்டான். போலீசார் வரும் போதும், அவன் துப்பாக்கியால் சுட்டு கொண்டிருந்தான்,’’ என்றார்.

இந்திய வாலிபர் ஆற்றில் மர்மச்சாவு

இந்திய வம்சாவளியை சேர்ந்த கணிதவியலாளர் சுவ்ரோ பிஸ்வாஸ் கிரிப்டோகரன்சி பாதுகாப்பு தொடர்பான ஆன்லைன் பிரச்னைகள், செயற்கை நுண்ணறிவு குறித்து மிகுந்த திறமை கொண்டவர். அதீத மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த சுவ்ரோ மீது குடியிருப்பில் உள்ள மக்கள், காவலர்கள், சொத்துகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக மான்ஹட்டன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அவரது சடலம் ஹட்சன் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. இவரது மரணம் குறித்து  உண்மை நிலை பிரதே பரிசோதனை அறிக்கைக்கு பிேரத தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>