காலையில் அதிகரித்த நிலையில் தங்கம் விலை மாலையில் குறைந்தது

சென்னை: தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஒரு நாள் விலை குறைந்தால், அடுத்த நாள் விலை அதிகரிப்பதுமான போக்கு இருந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ₹4,408க்கும், சவரன் ₹35,264க்கும் விற்கப்பட்டது.  இந்நிலையில் நேற்று காலை தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது, கிராமுக்கு ₹32 அதிகரித்து ஒரு கிராம் ரு.4,440க்கும், சவரனுக்கு ₹256 அதிகரித்து ஒரு சவரன் ₹35,520க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாக சவரன் ₹256 அதிகரித்தது நகை வாங்குவோரை அதிர்ச்சியடைய செய்தது. மாலையில் தங்கம் விலை குறைந்தது. அதே நேரத்தில் நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு ₹12 அதிகரித்து ஒரு கிராம் ₹4,420க்கும், சவரனுக்கு ₹96 அதிகரித்து ஒரு சவரன் ₹35,360க்கும் விற்கப்பட்டது.

Related Stories: