ஹரித்துவார் கும்பமேளாவில் பங்கேற்ற 30 சாதுக்களுக்கு கொரோனா தொற்று உறுதி!: பக்தர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்..!!

டெஹ்ராடூன்: ஹரித்துவாரில் நடைபெற்று வரும்  கும்பமேளாவில் பங்கேற்ற 30 சாதுக்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில்,  உத்திராக்கண்ட் மாநிலம் ஹரித்துவாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 1ம் தேதி தொடங்கியது. அரசு கூறிய எந்த விதிகளும் கடைபிடிக்காமல் கும்பமேளாவில் ஒரேநேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் கங்கை நீராடி வருகின்றனர். முகக்கவசம் அணிதல், கொரோனா பரிசோதனை சான்றிதழ் அவசியம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் காற்றில் பறந்தன.

கடந்த 14ம் தேதி மட்டும் ஹரித்துவாரில் 43 லட்சம் பக்தர்கள் வந்து புனித நீராடியதாக உத்தராகண்ட் அரசு தெரிவித்தது. கும்பமேளாவில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற முடியாத நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிப்பதால் கும்பமேளாவை நாளையுடன் முடித்துக் கொள்வதாக 13 அகாடாக்களின் ஒரே அமைப்பான நிரஞ்சனி அகாடா நேற்று அறிவித்தது. இந்நிலையில், ஹரித்துவாரில் கும்பமேளாவிற்கு பங்கேற்ற சாதுக்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து சாதுக்களுக்கும், அகாதாக்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஹரித்துவாருக்கு வந்து சென்ற பக்தர்கள் தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கும்பமேளாவில் பங்கேற்றுள்ளனர். இதனால் அனைத்து மாநிலங்களிலும் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Related Stories: