மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு மீண்டும் திட்டவட்டம்

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது. கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் நலன் கருதி அனுமதியில்லை. பக்தர்களுக்கு அனுமதியில்லை என்ற கோயில் நிர்வாகத்தின் உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. சித்திரை திருவிழாவின் போது சிறப்பு பாஸ், வி.ஐ.பி பாஸ் என எதற்கும் அனுமதி கொடுக்க வேண்டாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா என்பது தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும். மீனாட்சியம்மன் திருக்கோவில் திருக்கல்யாணம், தேரோட்டம் மற்றும் அழகர் எதிர் சேவை, அழகர் ஆற்றில் இறங்குவது உட்பட தொடர்ந்து 15 நாட்கள் இந்த திருவிழா என்பது மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவை காண்பதற்கு உலகம் முழுவதும் இருந்து பகதர்கள் வருவார்கள். அதனை கருத்தில் கொண்டு தற்போது கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசின் சார்பாக இந்த விழா என்பது இந்த வருடமும் பக்தர்கள் அனுமதி இன்றி உரிய விதிமுறைகளை பின்பற்றி கோவில் ஊழியர்களுடன் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். மேலும் இந்த திருவாலவாய் பகதர்கள் இணையதளம் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக பக்தர்கள் பார்த்துக்கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி தான் தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Related Stories: