×

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.35,424 க்கு விற்பனை..! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்

சென்னை: சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.35 ஆயிரத்து 424-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.4,428 ஆக உள்ளது. கிட்டத்தட்ட ரூ.43 ஆயிரத்தை எட்டி வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்தது. அச்சமயம் தொழில்துறையில் நிலவிய தேக்கத்தால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிகளவு முதலீடு செய்தது, விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியதும் தங்கம் விலை கணிசமாக குறைந்து ரூ.33 ஆயிரத்தில் நீடித்து வந்தது. தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருவதால், தொழில்துறை ஆட்டம் காணுகிறது. முதலீட்டாளர்கள் மீண்டும் தங்களது முதலீடுகளை தங்கத்தின் மீது திசைத் திருப்பியுள்ளனர். இதனால், கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தங்கம் விலை ஏறுமுகத்தில் உள்ளது.

நேற்று பவுனுக்கு ரூ. 176 குறைந்து ரூ.34 ஆயிரத்து 864-க்கு விற்றது. இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.560 உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 424-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.4,428 ஆக உள்ளது. தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து ரூ. 73 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.40-க்கு விற்கிறது. இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.4,428க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.384 உயர்ந்து ரூ.35,424க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.40க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.73,400க்கும் விற்பனையாகிறது.

Tags : Gold prices on the rise again: Rs 560 per razor, a razor sells for Rs 35,424 ..! Jewelry lovers in shock
× RELATED கொரோனா நோய்த் தடுப்பு பணிகளுக்காக...