வாங்கி 53 நாட்களில் வெடித்தது டயர் கடை ₹7500 நஷ்டஈடு வழங்க வேண்டும் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

நாகர்கோவில், மார்ச் 28:  53 நாட்களில் டயர் வெடித்ததால் அதனை விற்பனை செய்த கடை நிர்வாகம் a7500 நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குமரி மாவட்டம் வெள்ளிமலை அருகே கல்படியை சேர்ந்தவர் கண்ணன். நாகர்கோவிலில் உள்ள டயர் கடை ஒன்றில் இருந்து a1060 மதிப்பில் இரு சக்கர வாகனத்திற்கு டயர் ஒன்றை வாங்கியுள்ளார். வாங்கிய 53 நாளில் டயர் வெடித்து சேதமடைந்துள்ளது. மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த போது திடீரென டயர் வெடித்ததால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 2 பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே புதிய டயர் மாற்றித்தருமாறும், ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடு தருமாறும் டயர் கடைக்காரரை கண்ணன் கேட்டுள்ளார். ஆனால் டயர் கடை மறுத்து விட்டது. உடனே வழக்கறிஞர் மூலம் கண்ணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான கண்ணன், குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் டயர் கடையின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு டயருக்கு ஏற்கனவே செலுத்தப்பட்ட தொகை a1060, நஷ்டஈடு a7500 மற்றும் வழக்கு செலவு தொகை a2500 ஆக மொத்தம் a11 ஆயிரத்து 60 ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்….

The post வாங்கி 53 நாட்களில் வெடித்தது டயர் கடை ₹7500 நஷ்டஈடு வழங்க வேண்டும் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: