கம்பத்தில் குறைகேட்பு கூட்டம்

கம்பம், மார்ச் 28: கம்பத்தில் ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பேரவை சார்பாக குரல் கேட்பு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேனி மேற்கு மாவட்ட செயலாளர் அதியர் மணி தலைமை தாங்கினார். தேனி மாவட்டம் கொள்கை பரப்புச் செயலாளர் கோட்டை குரு முருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தூய்மை தொழிலாளர்களை பாதிக்கக்கூடிய அரசாணை 152 சட்டவிதியை தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒரு முறைதூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தி முழுஉடல் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பேரவை தலைவர் பரமன், செயலாளர் சின்ன முருகன் ஒப்பந்த தூய்மை தொழிலாளர் பேரவை தலைவர் மணிகண்டன்,நகர துணைச் செயலாளர் மருது பாண்டியன், கம்பம் ஒன்றிய பொறுப்பாளர் ஈஸ்வரன், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்….

The post கம்பத்தில் குறைகேட்பு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: