நாகப்பட்டினம் / மயிலாடுதுறை இடைநிலை ஆசிரியருக்கு பாராட்டு நாகப்பட்டினம் ஒன்றியக்குழு கூட்டம் கவுன்சிலர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் அனுசியா தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் வரவேற்றார். துணைத்தலைவர் மலர்விழி முன்னிலை வகித்தார். ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:- மணிவண்ணன்: ஒன்றிய பணிகளுக்கு டெண்டர் விட்டும் பணிகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. பணிகளை குறித்த காலத்திற்குள் தேர்வு செய்ய வேண்டும். ஒரே ஒப்பந்தக்காரர்களிடம் அதிகஅளவில் பணிகளை கொடுப்பதால் காலதாமதம் ஏற்படுகிறது. இதைத்தடுக்க பணிகளை பிரித்து வழங்க வேண்டும். ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சிசிடிவி கேமரா, சூரிய சக்தியில் செயல்படும் விளக்கு அமைக்க கலெக்டரிடம் நிதி கேட்டு பரிந்துரை செய்ய வேண்டும்.பரமேஸ்வரன்: ஆலங்குடி ஊராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து கடந்த கூட்டத்தில் எழுதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வேறு பணிகளுக்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளே பணிகளை தேர்வு செய்தால், மக்கள் பிரதிநிதிகள் நாங்கள் எதற்கு இருக்கிறோம். மாற்றுத்திட்டத்தில் பணிகள் தேர்வு செய்யப்பட்டிருந்தால் அதற்கான தகவலை கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மாலதி: புதுச்சேரி வடக்குத்தெருவில் சாலை அமைக்க வேண்டி 3 ஆண்டுகளாக கூறியும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றார்.ராஜா: அதிகாரிகள் நாங்கள் தெரிவித்த கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வருவதில்லை. சரியானமுறையில் சரியாக நேரத்திற்கு திட்டங்களுக்கு மதிப்பீடு செய்வதில்லை. இதனால் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு ஆண்டு கணக்கில் முடிக்காமல் உள்ளது. பொரவச்சேரியில் சேதம் அடைந்த மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி இடித்து அகற்றப்பட்டது. ஆனால் அதற்கு மாற்று ஏற்பாடு என்ன செய்யப்பட்டது. கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தின்கீழ் பாரதிநகரில் ரூ.10 லட்சம் செலவில் குடிநீர் தேக்க மையம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. அதேபோல் சுத்திகரிப்பு நிலையமும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல் அந்தணப்பேட்டையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், அப்பகுதியில் ஒரு குடிநீர் தேக்க மையம் கட்ட வேண்டும்.பாண்டியன்: செல்லூரில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதிகளில் சாலைகள் சேதம் அடைந்துவிட்டது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சுனாமி குடியிருப்பு அனைத்து சாலைகளும் சிமெண்ட் சாலைகளாக அமைத்து தர வேண்டும். ஒன்றியக்குழு தலைவர் அனுசியா: கவுன்சிலர்கள் தெரிவித்த கோரிக்கைளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் ஊராட்சி தலைவர்களிடம் பேசி பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். குடிநீர் பிரச்னையை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றுத்திட்டத்தில் பணிகள் மேற்கொள்வது குறித்து கவுன்சிலர்களுக்கு உரிய தகவல் தெரிவிக்கப்படும் என்றார். ஒன்றிய பொறியாளர் ராஜாராமன் நன்றி கூறினார்….

The post நாகப்பட்டினம் / மயிலாடுதுறை இடைநிலை ஆசிரியருக்கு பாராட்டு நாகப்பட்டினம் ஒன்றியக்குழு கூட்டம் கவுன்சிலர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் appeared first on Dinakaran.

Related Stories: