ஒன்றியக்குழு தலைவர் தகவல் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தகோரி மனிதசங்கிலி ஜாக்டோ- ஜியோ போராட்டம்

கீழ்வேளூர்: கீழ்வேளூர் வட்டார ஜாக்டோ -ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அந்தோணி ஞானராஜ், சீனிவாசன் தலைமை தாங்கினர். இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்தபடி அரசு ஊழியர், ஆசிரியர்களுக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதிய மற்றும் சிறப்பு கால ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துண ஊழியர்கள் உள்ளிட்டவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக முறைப்படுத்த வேண்டும், ஏழாவது ஊதிய குழுவில் 21 மாதம் நிலுவை தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கழுத்தில் பட்டை அணிந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, ஆசிரியர் கூட்டமைப்பினர், சத்துணவு ஊழியர் சங்கத்தினர், உள்ளிட்ட 1100 பேர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்….

The post ஒன்றியக்குழு தலைவர் தகவல் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தகோரி மனிதசங்கிலி ஜாக்டோ- ஜியோ போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: