கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கடைசி 3 கட்ட தேர்தலை ஒன்றாக நடத்த மம்தா கோரிக்கை

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் மீதமுள்ள 3 கட்ட தேர்தலை ஒரே கட்டமாக நடத்த ஆணையத்துக்கு மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். தேர்தலை ஒரே கட்டமாக நடத்தினால் கொரோனா பரவலையும் உயிரிழப்பை தடுக்க முடியும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் 45 தொகுதிகளுக்கான 5ம் கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. 6ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 22, 7ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26, 8ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் இன்னும் 159 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Related Stories:

>