×

உக்கடம் குளக்கரை சுவர் இடிந்தது பற்றி கமல் சாடல்

கோவை: கோவை உக்கடம் குளக்கரையில் கட்டப்பட்டிருந்த 12 அடி உயர தடுப்புச்சுவர் ஒருநாள் மழைக்கே இடிந்து விழுந்துள்ளது என்று கமல் கூறியுள்ளார். உக்கடம் குளக்கரை சுவர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டு வெறும் 6 மாதங்கள் தான் ஆகின்றன என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். டெண்டர் அரசின் சாதனைப் பட்டியலில் கோவை உக்கடம் குளக்கரை தடுப்புச் சுவரும் இணைந்திருக்கிறது என்று கமல் கூறியுள்ளார். 6 மாதத்தில் அடித்துச் செல்லப்படும் தடுப்பணை, கட்டும்போதே இடிந்து விழும் மருத்துவமனை என பட்டியல் நீள்கிறது. கோடிக்கணக்கில் டெண்டர் விட்டு கட்டப்படும் கட்டுமானங்களுக்கு ஏன் கேரண்டியும், வாரண்டியும் இல்லை என கமல்ஹாசன் வினவியுள்ளார். இ-டெண்டர்கள் கூட சம்பந்திகளுக்கும், மச்சினன்களுக்கும் அளிக்கப்படும் மாயம் என்ன? என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். கட்டுமானம் இடிந்து விழுந்த பின்னர் குத்தகைதாரர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? தண்டிக்கப்பட்ட அதிகாரிகள் எத்தனை பேர்? என்று வினவியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் கட்டப்பட்ட அரசு கட்டுமானங்களை கறாரான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். போன பணம் போனது தான் என்றாலும், உயிரிழப்புகளையாவது தடுப்பதற்கு இந்த முன்னெச்சரிக்கை உதவும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Tags : Kamal Saadel ,Ukadam Bucker Wall , kamal
× RELATED வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தேனா? அண்ணாமலை பேட்டி