கந்தர்வகோட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் முப்பெரும் விழா

கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக நீர் தினம், உலக வானிலை தினம் துளிர் திறனறிவுத் தேர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமை வகித்து பேசும்போது, உலக வானிலை நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு தேசிய வானிலை மற்றும் நீரியல் சேவைகளின் இன்றியமையாத பங்களிப்பை இது காட்டுகிறது மற்றும் உலகெங்கிலும் உள்ள செயல்பாடுகளுடன் கொண்டாடப்படுகிறது. காலநிலை அல்லது நீர் தொடர்பான பிரச்சனைகளை பிரதிபலிக்கின்றன. நீரின் தேவைகள் குறித்தும், நீரின்றி அமையாது உலகு என வள்ளுவர் கூறிய போல நீர் நம் வாழ்வில் முக்கிய அங்கமாகும். மாணவர்கள் எவ்வாறு நீரினை பாதுகாக்க வேண்டும் என பேசினார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பாக்யராஜ் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கந்தர்வகோட்டை தமிழ்நாடு அறிவியல் வட்டார தலைவர் ரகமதுல்லா பேசும்போது, சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு 1992ம் ஆண்டு ரியோ ஜெனிரோவில் நடைபெற்றது. தண்ணீருக்கான பிரச்னைகளை தீர்க்கவும், சரி செய்யவும் மார்ச் 22ம் நாளை ‘உலக தண்ணீர் தினம்’ என்று கொண்டாட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனால் ஐக்கிய நாடுகளின் பொது சபை 1993ம் ஆண்டு மார்ச் 22 முதல் உலக தண்ணீர் தினத்தை கொண்டாட வடிவமைத்துக் கொடுத்தது. நீர் வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது உலக தண்ணீர் தினத்தின் நோக்கமாகும் என்று பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டார செயலாளர் சின்ன ராஜா அறிவியல் இயக்கம் மாணவர்களுக்கு துளிர் திறனறிவுத் தேர்வு விஞ்ஞான சிறகு மாத இதழ், மந்திரமா? தந்திரமா? ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது. மாணவர்கள் விஞ்ஞான சிறகு இதழ்களை வாசிக்க வேண்டும் எனவும் பேசினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியைகள் மாலா, மைவிழி, வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்….

The post கந்தர்வகோட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் முப்பெரும் விழா appeared first on Dinakaran.

Related Stories: