கேழ்வரகு இனிப்பு அடை

செய்முறை:

Advertising
Advertising

வெல்லத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். வெல்லக்கரைசல் ஓரளவு கெட்டியானதும் தேங்காய் துருவலை சேர்க்கவும். பிறகு கேழ்வரகு மாவு, ஏலக்காய்த்தூள், பொடித்த முந்திரி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். வாழை இலையில் நெய் தடவி, மாவை சற்று கனமான அடைகளாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் நெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.சுவையான கேழ்வரகு இனிப்பு அடை தயார்.