×

பெண்களும் செய்யலாம் மெடிக்கல் கோடிங்

நன்றி குங்குமம் தோழி

தகவல் தொழில்நுட்பத் துறையில் இன்றைக்கு பெண்களின் பங்களிப்பு அதிகரித்தே வருகிறது. அந்த வகையில் அயல் நாடுகளுக்காக மருத்துவ  பராமரிப்பை வழங்கி வரும் துறையானது, மிகப் பெரிய வளர்ச்சியை தொடர்ந்து சந்தித்து வருகிறது. இந்தியாவில் அறிவியல் துறை மாணவர்களுக்கு  சிறப்பான பணிக்கான விருப்பத் தேர்வுகளை வழங்கி வருகிறது மருத்துவ குறியீட்டு ( Medical Coding ) துறை. அதிவேக வளர்ச்சியை  எதிர்கொண்டு வரும் மற்ற துறைகளுள் ஒன்றாக மருத்துவ குறியீட்டு துறை விளங்கி வருகிறது.

அந்த வகையில் இச்சேவையை வழங்கி வரும் ஒமேகா ெஹல்த்கேர் நிறுவனம் 2004ஆம் ஆண்டு பெங்களூரில் தொடங்கப்பட்டு தற்போது சென்னை,  திருச்சி, பீமாவரம், ஹைதராபாத், மணிலா, சிபு ஆகிய நகரங்களில் விரிவுப்படுத்தியுள்ளது. தற்போது இந்நிறுவனத்தில் 12,500க்கும் மேற்பட்ட  ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில், 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பெண்களே. 100க்கும் மேற்பட்டவர்கள் மாற்றுத்திறனாளிகள்  என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்கு பயிற்சி அளித்து பணியில் சேர்க்கும் திட்டத்துடன் தொடங்கப்பட்ட ஒமேகா மெடிக்கல் கோடிங் அகாடெமி (OMCA), சென்னை,  திருச்சி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் அடுத்த 6 மாதங்கள் என்ற கால அளவில் 1500 மாணவர்களை பயிற்சிக்காக சேர்க்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து OMCA-வின் தொழில்நுட்ப பயிற்சி, தரம், இயக்க நேர்த்தி துறையின் தலைவரும் நிறுவனத்தின் துணைத்தலைவருமான சத்ய கோபால்  கல்லூரி கூறுகையில்.

‘‘ஒமேகா ஹெல்த்கேர் நிறுவனத்தால் நிறுவப்பட்ட OMCA, மருத்துவ குறியீட்டு செயல் தளத்தில் தங்களது வாழ்க்கைப் பணியை (கேரியர்) தொடர  விரும்புகிற அறிவியல் பட்டதாரிகளுக்கு மருத்துவ குறியீட்டியலில் 45 நாட்கள் சான்றிதழ் கல்வித் திட்டத்தை வழங்குகிறது. மருத்துவ  குறியீட்டியலில் உலகத்தரம் வாய்ந்த பயிற்சியை வழங்குவதன் மூலம், கல்வித் துறையிலும் இதனை விரிவாக்கம் செய்கின்ற நோக்கத்தோடு  2014ஆம் ஆண்டில் ஒமேகா மெடிக்கல் கோடிங் அகாடெமி (OMCA) நிறுவப்பட்டது.

இங்கு மாணவர்களுக்கு அனுபவமிக்க தகுதிவாய்ந்த ஆசிரியர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது . அறிவு இடைவெளியை நிரப்புவதற்கு இது மிகப்பெரிய  அளவில் உதவுவதோடு மாணவர்களுக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்து தரவும் செய்கிறது. சென்னை, திருச்சி மற்றும் பெங்களூரு ஆகிய  நகரங்களில் மையங்களை கொண்டிருக்கிற இந்த அகாடெமி 2000-க்கும் அதிகமான மருத்துவ குறியீடல் பணியாளர்களுக்கு  சிறந்த பயிற்சியளித்து  அவர்களுக்கு இத்துறையில் ேவலை வாய்ப்பையும் ஏற்படுத்தி தருகிறது.

சுகாதார சேவை தொழில்துறையில் மருத்துவ குறியீட்டு பணியாளர்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், அதை பூர்த்தி செய்வதற்காக பல்வேறு  நகரங்களிலிருந்து 1200 முதல் 1500 வரை மாணவர்களை பயிற்சியில் சேர்ப்பது குறித்து திட்டமிட்டு வருகிறோம். கடந்த நான்கு ஆண்டுகளில்  ஏறக்குறைய 4000 மாணவர்களுக்கு இத்தகைய பயிற்சியை நாங்கள் வழங்கியிருக்கிறோம். அவர்களுள் 2000-க்கும் அதிகமான நபர்களுக்கு ஒமேகா  நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டுள்ளது. கல்லூரியிலிருந்து தேர்ச்சி பெற்று வெளிவருகிற இளம் பட்டதாரிகளுக்கு மிக அத்தியாவசியமான  மென்திறன் பயிற்சியினை ஏராளமாக கொண்டிருக்கும் வகையில் பயிற்சிக்கான பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ குறியீடலில் பயிற்சி மட்டும் இல்லாமல், நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தருகிறது. உயிரிவேதியியல், உயிரி தொழில்நுட்பம்,  விலங்கியல் போன்ற உயிரி அறிவியல் பின்புலத்தை கொண்டிருக்கும் மாணவர்கள், மருந்தாளுநர்கள், இயன்முறை சிகிச்சை நிபுணர்கள் மற்றும்  செவிலியர்களுக்கும் மருத்துவ குறியீடல் என்பது, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிற துறை மட்டும் இல்லாமல், நல்ல ஊதியம் தரக்கூடிய  ேவலை வாய்ப்பும் பெண்களுக்கு இந்த துறையில் இருக்கிறது’’ என்றார் சத்ய கோபால் கல்லூரி.

தி.சபிதா ஜேஸ்பர்

Tags : Women ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...