டெல்லி-ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 7வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லி முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை எளிதாக வீழ்த்தியது. பிரித்வி ஷா, தவான், கேப்டன் ரிஷப் பன்ட் சூப்பர் பார்மில் உள்ளனர். மிடில் ஆர்டரில் ரகானே, ஹெட்மயர், ஸ்டோனிஸ் வலு சேர்க்கின்றனர். பந்து வீச்சில் இன்று ரபாடா களம் இறங்குவது கூடுதல் பலம். அஸ்வின், அவேஷ்கான், அமித் மிர்சா ஆகியோர் தங்கள் பணியை சிறப்பாக செய்கின்றனர். இதனால் வெற்றியை தொடரும் முனைப்பில் களம் இறங்குகிறது.

மறுபுறம் ராஜஸ்தான் முதல் போட்டியில் பஞ்சாப்பிற்கு எதிராக 222 ரன்னை சேசிங் செய்ய போராடி 4 ரன்னில் தோற்றது. கேப்டன் சஞ்சு சாம்சன் 119 ரன் விளாசினார். ஆனால் மற்ற யாரும் அவருக்கு கைகொடுக்கவில்லை. ஜோப்ரா ஆர்ச்சர் காயத்தில் இருந்து மீளாத நிலையில், ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்சும் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளது பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஜோஸ்பட்லர், டேவிட் மில்லர், ரியான் பராக் ஆகியோர் மீது மிகவும் எதிர்பார்ப்பு உள்ளது.  இன்று வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் ராஜஸ்தான்  களம் காண்கிறது. இரு அணிகளும் இதுவரை 22 போட்டிகளில்  நேருக்கு நேர் மோதுகின்றன. இதில் தலா 11 வெற்றிகளை பெற்றுள்ளன.

Related Stories:

>