பெரம்பலூரில் மருத்துவ காப்பீடு அட்டை கேட்ட இருதய நோயாளிக்கு உடனடி தீர்வு

பெரம்பலூர்: பெரம்பலூரில் இருதய நோயாளி ஒருவரின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சரின் மருத்துவ காப்பீடுதிட்ட அட்டை மற்றும் புதிய குடும்ப அட்டை மாவட்ட கலெக்டர் கற்பகம் வழங்கினார். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா திருமாந்துறையைச் சேர்ந்த அருண்சற்குணம்(43) என்பவர் திரு ப்பூர் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை பார்த்து வருகிறார். இருதய நோயால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவ சிகிச்சைக்காக சென்றபோது, மருத்துவர்கள் அதிகம் செலவாகும் என தெரிவித்துள்ளனர். முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ளலாம் என நினைத்து, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு அட்டை விண்ணப்பிக்கச் சென்றபோது, அவரிடம் குடும்ப அடையாள அட்டை இல்லை. இதனால் பல நாட்களாக சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்தார்.மேலும் கடந்த 5 வருடங்களாக குடும்பஅட்டை வேண்டி விண்ணப்பித்தார். அவர் திருப்பூர் பகுதியில் பணிபுரிந்து வருவதால் திருமாந்துறையில் உள்ள அவரது வீட்டிற்கு விசாரணைக்கு சென்ற அலுவலர்கள் வீட்டில் ஆள்இல்லை என்பதற்காக அவரது மனுவை நிராகரித்து வந்தனர். இந்நிலையில், குடும்ப அட்டை கோரியும், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை கோரியும் தான் கொண்டு வந்த கோரிக்கை மனுவோடு மாவட்ட கலெக்டர் அலுவலக தரைதளத்தில் நின்று கொண்டிருந் தார். அப்போது அலுவலகம் வந்த மாவட்ட கலெக்டர் கற்பகம், அருண்சற்குணத்திடம் என்ன கோரிக்கைக் காக வந்துள்ளீர்கள் எனக் கேட்டு விசாரித்துள்ளார். அருண் சற்குணத்தின் நிலையினை உணர்ந்த மாவட்ட கலெக்டர் உடனே அவருக்கு குடும்ப அட்டையும், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டையும் வழங்க உத்தர விட்டதைத் தொடர்ந்து அரு ண் சற்குணத்திற்கு புதிய குடும்ப அட்டை மற்றும் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டையும் வழங் கப்பட்டது. இதற்காக அருண் சற்குணம் நன்றி தெரிவித்துக் கொண்டார். துரிதமாக செயல்பட்டு நடவடி க்கை எடுத்த மாவட்ட வழங்கல் அலுவலருக்கும், முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டிற்கான மாவட்ட அலுவலருக்கும் மாவட்ட கலெக்டர் பாராட்டுக்களை தெரிவித்தார்….

The post பெரம்பலூரில் மருத்துவ காப்பீடு அட்டை கேட்ட இருதய நோயாளிக்கு உடனடி தீர்வு appeared first on Dinakaran.

Related Stories: