பாலுக்கு விலையை உயர்த்தி வழங்க கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் பாலை தரையில் கொட்டி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்: பாலுக்கு விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி -பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் பு தமிழக ஏரி மற்றும் ஆற் றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் பாலை தரை யில் கொட்டி ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தினர் நேற்று(24ம்தேதி) அதன் தலைவர் பூரா விசுவ நாதன் தலைமையில் பெ ரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்திருந்தனர். அவர்கள் கையோடு கொண்டு வந்த பால் கேன்களை கவிழ்த்து பாலை தரையில் ஊற்றிக் கோசமட்டனர்.ஆவின் வழங்கி வந்த மாட் டுத்தீவன மூட்டை ரூ950-ல் இருந்து ரூ1000 ஆக மாறி தற்போது மூட்டைக்கு ரூ 1050 முதல் 1100 வரை விற் கப்படுகிறது. ஆனால் ஆ வின் நிறுவனத்திடம் விவ சாயிகள் விற்கின்ற பால் ரூ 33.50கும் ரூ35க்கும் கொ ள்முதல் செய்யப்படுகிறது பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க பசும்பால் லிட்டருக்கு ரூபாய் 45க்கும், எருமைப்பால் லிட்டருக்கு ரூபாய் 55க்கும் விலை அறி விக்க வேண்டும். மாட்டுத்தீவனம் மூட்டை தற் போது 150 க்கு விற்பதை 50 சதவீத மானியத்தில் மாட்டு தீவனம் கிடைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடு க்க வேண்டும். வேப்பந்தட் டை தாலுக்கா பாலையூர் வேத நதியில் விவசாயிகள் கால்நடைகள் இறங்கிச் செல்ல வசதியாக படிக்க ட்டுகள்அமைக்கவேண்டும். அப்பகுதியில் உலர் களம் அமைக்க வேண்டும் அதிக மாக உற்பத்தி செய்யப்ப டும் மக்காச்சோளத்தை பெ ரம்பலூர் மாவட்டத்தில் அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண் டும். பருத்தியை இந்திய பருத்தி கழகமே கொள்மு தல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.செங்குணம் ஆதிதிராவிடர் மக்களுக்கு மயான வசதி ஏற்படுத்தி தர வேண்டும் அனைத்து தரப்பு விவசாயி களுக்கும் வெங்காய கொ ட்டகை, மாட்டு கொட்டகை கிடைக்க நடவடிக்கை எடுக் க வேண்டும் என்பன உள் ளிட்டகோரிக்கைகளை வ லியுறுத்தி கோசமிட்டனர் இதனால் கலெக்டர் அலு வலகம் முன்பு பரபரப்பாக காணப்பட்டது.பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் கலா அங்கு வந்து தரையில் ஊற்ற முற் பட்ட பால் கேனையும், பால் பாட்டில்களையும் பறித்துச் சென்றார். பின்னர் கலெக் டர் அலுவலக இரண்டாம் தளத்தில் நடைபெற்ற விவ சாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் இருந் த மாவட்டக் கலெக்டர் கற்ப கத்திடம் கோரிக்கை மனு வை அளித்தனர்….

The post பாலுக்கு விலையை உயர்த்தி வழங்க கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் பாலை தரையில் கொட்டி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: