கரூர் மாநகராட்சி பகுதியில் உலக தண்ணீர் தின மரக்கன்று நடும் விழா

கரூர்: உலகம் முழுவதும் உலக தண்ணீர் தினமாக மார்ச் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. தண்ணீரின் சிக்கனத்தையும் தண்ணீர் மாசுபடாமல் இருப்பதற்கு செய்ய வேண்டிய வழிமுறை குறித்தும் பன்னாட்டு சுகாதார அமைப்பு வலியுறுத்தியதின் பேரில் உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் செய்து வருகிறது. இதன் இதன் அடிப்படையில் கரூர் மாநகராட்சி 31 வார்டு வார்டு பகுதிக்கு உட்பட்ட திருவிக சாலையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. விழாவில் மாமண்ட உறுப்பினர் சாந்தி பாலாஜி கலந்துகொண்டு மரக்கன்று நட்டு வைத்தார். அதிகாரி டாக்டர் லட்சிய வர்மா, சுகாதார ஆய்வாளர்கள் சுகுமார், மதியழகன், வர்த்தக அணி அமைப்பாளர் ஜிம் சிவா, இளைஞர் அணி பாலாஜி மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.உலக தண்ணீர் தின கிராம சபை கூட்டம் கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் பகுதியில் உள்ள ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நீரின்றி அமையாது உலகு என்பதற்கு இணங்க மக்கள் தண்ணீரை சிக்கனமாகவும் பயன்படுத்துதல், தண்ணீரின் அவசியத்தை பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான ஊராட்சிகளில் குடிநீர் பிரச்சனைகள் உள்ளது என காரசாரமாக கூட்டத்தில் பொதுமக்கள் கூறினார். கிராம சபை கூட்டமானது மகாதானபுரம் ஊராட்சியில் துணைத் தலைவர் கஸ்தூரி தலைமையிலும், கம்மநல்லூர் ஊராட்சியில் தலைவர் இந்துமதி தலைமையிலும், மாயனூர் ஊராட்சியில் தலைவர் கற்பகவல்லி தலைமையிலும், திருக்காம்புலியூர் ஊராட்சியில் தலைவர் கார்த்திக் தலைமையிலும், கள்ளபள்ளி ஊராட்சியில் தலைவர் சக்திவேல் தலைமையிலும், கூட்டம் நடைபெற்றது.  மேலும் கூட்டத்தில் அரசு அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள்,அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்….

The post கரூர் மாநகராட்சி பகுதியில் உலக தண்ணீர் தின மரக்கன்று நடும் விழா appeared first on Dinakaran.

Related Stories: