மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1000 கிருஷ்ணராயபுரம் ஒன்றியக்குழு கூட்டத்தில் வரவேற்பு

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றிய குழு கூட்டத்தில் தமிழக அரசு 2023-2024 ஆண்டு நிதி நிலை அறிக்கை கூட்டத்தில் தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரர் மகளிர்க்கு ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய குழு தலைவர் சுமித்ராதேவி தலைமையில் துணைத் தலைவர் கவிதா,பிடிஓ தவமணி,ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் தீர்மானங்களை ராஜமாணிக்கம் வாசித்தார். இதில் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறிய குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 என மகளிர்க்கு வழங்கப்படும் என கூறியிருந்தனர். அதன்படி தமிழக சட்டமன்ற 2023-2024 பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் வரும் செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்து சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மேலும் ஒன்றிய அலுவலகத்தின் செலவினங்கள் உட்பட மொத்தம் 34 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.கவுன்சிலர் பாரதிதாசன்; கவுன்சிலர்கள் கூட்டம் தொடங்கும் போது தமிழ் தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்க வேண்டும் என கூறினார். இதற்கு இனி வரும் கூட்டத்திலிருந்து தமிழ் தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கப்படும் என்று இன்று திருக்குறளுடன் தொடங்கப்படும் என தெரிவித்தனர். திமுக கவுன்சிலர் கோபால்; சிந்தலவாடி ஊராட்சியில் லாலாபேட்டை-புனவாசிப்பட்டி சாலையில் இருந்து கீழ சிந்தலவாடி மாரியம்மன் கோவில் வரையில் உள்ள தார் சாலைக்கு கடந்த இரண்டரை ஆண்டுக்கு முன் டெண்டர் விடப்பட்டது. அதனை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணிபுரியும் நபரை டெண்டர் எடுத்துக்கொண்டு இரண்டரை வருடம் ஆகியும் இன்னும் சாலை போடாமல் உள்ளார் என தெரிவித்தார். பிடிஓ ராஜேந்திரன்; இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் மோகன்ராஜ், கோபால், பாலசுப்ரமணியன், பாரதிதாசன் உட்பட ஏராள கலந்து கொண்டனர்….

The post மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1000 கிருஷ்ணராயபுரம் ஒன்றியக்குழு கூட்டத்தில் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: