சென்னை பல்கலைக்கழகம் சமூகப்பணித்துறை மாணவர்கள் கிராமிய முகாம்

பந்தலூர்,  மார்ச் 27: பந்தலூர் அருகே ஏலமன்னா பன்னிக்கல் பழங்குடியினர் கிராமத்தில்  சென்னை பல்கலைக்கழகம் சமூகப்பணித்துறை மாணவர்கள் முகாம் நடந்தது. உலக தண்ணீர்  தினத்தை முன்னிட்டு ஏலமன்னா பன்னிக்கல் பழங்குடியினர் கிராமத்தில் சென்னை  பல்கலைக்கழகம் சமூகப்பணித்துறை மாணவர்கள் மற்றும் ஏலமன்னா சிடிஆர்டி  அறக்கட்டளை ஆகியோர் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடத்தினர். பழங்குடியினர் மற்றும் கிராமமக்களின் வாழ்க்கை முறையை  தெரிந்துகொள்வதற்கு மாணவர்கள் கடந்த நான்கு நாட்களாக 5 குழுக்களாக பிரிந்து  மக்களின் சமூக பொருளாதாரம் வாழ்க்கை முறை மற்றும்  கலாசாரப் பின்னணிகள்  குறித்தும் விவரங்கள்  திரட்டினர். தொடர்ந்து  அப்பகுதியில் உள்ள அரசு  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்று கல்வியின் முக்கியத்துவம்  குறித்து மாணவர்களிடையே  விழிப்புணர்வு நாடகம் நடத்தினர், கிராமப்பகுதிக்கு  சென்று போதை பொருட்கள் மற்றும் மதுவினால் ஏற்படும் விளைவுகள் குறித்து கலை  நிகழ்ச்சிகள் நடத்தினர். மாணவர்களுக்கு  தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து  விழிப்புணர்வை ஏற்படுத்தி பல்வேறு திறன் போட்டிகளை நடத்தி பரிசுகள்  வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் சிடிஆர்டி அறக்கட்டளை நிறுவனர் ரங்கநாதன்  மற்றும் அறக்கட்டளை பணியாளர்கள் சென்னை பல்கலைக்கழகம் சமூகப்பணி மாணவர்கள்  கலந்துகொண்டு சிறப்பித்தனர். …

The post சென்னை பல்கலைக்கழகம் சமூகப்பணித்துறை மாணவர்கள் கிராமிய முகாம் appeared first on Dinakaran.

Related Stories: