மலைக்கோயிலில் உணவு இல்லை: பழநி நகருக்குள் புகுந்த குரங்குகள்..!

பழநி:  பழநி மலைக்கோயிலில் உணவு கிடைக்காததால் நகர் பகுதிக்குள் புகுந்த குரங்கு கூட்டத்தால் மக்கள் அவதியடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. பழநி மலைக்கோயிலில் 100க்கும் மேற்பட்ட குரங்குகள் இருந்தன. இவை பக்தர்கள் வழங்கும் பிரசாதங்கள், உணவுகளை உண்டு வாழ்ந்து வந்தன. பக்தர்கள் வருகை குறைவால் குரங்குகள் உணவின்றி வாடின.

இதனால் குரங்கு கூட்டம் உணவு தேடி பழநி நகரில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விட்டன. இங்குள்ள வீடுகளுக்குள் செல்லும் குரங்குகள் உணவுப்பொருட்களை எடுப்பதற்காக வீட்டில் உள்ளவர்களை விரட்டுகின்றன. குறிப்பாக முதியவர்கள், குழந்தைகளை விரட்டுவதால், அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். மாடிகளில் காயப்போட்டிருக்கும் துணிகளை எடுத்து சென்று விடுகின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். எனவே வனத்துறையினர் குரங்குகளை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டுமென பழநி நகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: