×

செய்முறை தேர்வுக்கு பேப்பர் பண்டல் கேட்ட விவகாரம் தலைமை ஆசிரியையிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

ஈரோடு: செய்முறை தேர்வு எழுத அனுமதிக்க தனித் தேர்வரிடம் பேப்பர்  வாங்கி தரச் சொன்ன விவகாரத்தில் விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவலகத்தில் இருந்து தலைமையாசிரியைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஈரோடு  கொல்லம்பாளையத்தில் உள்ள ரயில்வே காலனி மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியில்  10ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு கடந்த  20ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.  இதில், செய்முறை தேர்வு எழுத ஆம்புலன்ஸ் டிரைவரான அந்தியூர், பழனி மகன் மணிகண்டன் (25) என்பவர் விண்ணப்பித்திருந்தார். அதன்  அடிப்படையில், பள்ளியில் இருந்து, ஆசிரியர் ஒருவர் மணிகண்டனை  தொடர்பு கொண்டு செய்முறை தேர்வுக்கு வருமாறு அழைத்திருந்தார். அதன்பேரில், ரயில்வே காலனி மேல்நிலைப்பள்ளிக்கு மணிகண்டன் நேற்று முன் தினம் வந்துள்ளார்.  அப்போது  அவரிடம், செய்முறை பயிற்சி வகுப்புகளுக்கு முறையாக வராததால் வெள்ளை பேப்பர் 4 கட்டுகள் வாங்கி வந்தால் தான் தேர்வு எழுத  அனுமதிப்போம் என கூறியதாக தெரிகிறது. இதனால், அதிருப்தி அடைந்த மணிகண்டன், 4 கட்டு பேப்பரை வாங்கி கொண்டு பள்ளிக்கு வந்து, பள்ளியின் தலைமையாசிரியையின் செயலை கண்டித்து, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.  இதுகுறித்து,  பள்ளித் தலைமை ஆசிரியை தேன்மொழி கூறுகையில், முன்னாள் மாணவர்கள் பலரும்  அவர்களாக விருப்பப்பட்டு பள்ளிக்கு ஏராளமான உதவிகளை செய்து வருகின்றனர்.  தனித்தேர்வர் மணிகண்டனிடம் நாங்கள் யாரும் பேப்பர் வாங்கி வர சொல்லவில்லை என்றார். இந்த  நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என  கேட்டு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இருந்து பள்ளித் தலைமை  ஆசிரியை தேன்மொழிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது….

The post செய்முறை தேர்வுக்கு பேப்பர் பண்டல் கேட்ட விவகாரம் தலைமை ஆசிரியையிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Erode ,Dinakaran ,
× RELATED மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு