சென்னையில் காலை முதலே வெளுத்து வாங்கும் கனமழை: அடுத்த 3 மணி நேரத்திற்கு நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை: சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி கடல் அருகே நிலைகொண்டிருக்கும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக நேற்று மாலை முதல் தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. சென்னையில் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் சென்னையில் அதிகாலையில் இருந்து பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இன்று அதிகாலை தொடங்கி சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, தி-நகர், கிண்டி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், கொளத்தூர், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கிண்டி, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், பல்லாவரம், தாம்பரம், சேலையூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி என புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த சென்னை வாசிகள் தற்போது பெய்த மழையால் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: