பர்னிச்சர் கடையில் பயங்கர தீ விபத்து

ஈரோடு: ஈரோட்டில் பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதமானது. ரோடு  குமலன்குட்டை சரோஜினி நகர் பகுதியை சேர்ந்தவர் மாது (70). இவரும், இவரது மகன் செந்தில்குமாரும் ஈரோடு நசியனூர் ரோடு நாராயணவலசு பகுதியில்  பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வருகின்றனர். கடை, தினமும் காலை 8.30 மணிக்கு  திறக்கப்பட்டு இரவு 9.15 மணிக்கு பூட்டி செல்வது வழக்கம்.  தன்படி,  நேற்றுமுன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துக்கொண்டு இரவு 9.15 மணிக்கு மாது  கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இரவு 9.40  மணி அளவில் கடையில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதைப்பார்த்த  அக்கம் பக்கத்தினர் இதுபற்றி ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல்  கொடுத்தனர். தீயணைப்பு படை வீரர்கள் 3 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ  இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும்  முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிடம் போராடி தீயை கட்டுக்குள்  கொண்டு வந்தனர்.  ருப்பினும், கடைக்குள் இருந்து கரும்புகை வந்து  கொண்டிருந்ததால் தீயணைப்பு படை வீரர்கள் கடைக்குள் இருந்த அனைத்து  பொருட்களையும் வெளியில் கொண்டு வந்து, தீ முழுமையாக அணைந்ததை உறுதி செய்த  பின், அங்கிருந்து சென்றனர். பர்னிச்சர் கடையின் எதிரே பெட்ரோல் பங்க்  செயல்பட்டு வருகிறது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து செயல்பட்டதால்  பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தில் பர்னிச்சர் கடையில்  இருந்த கட்டில், பீரோ, மெத்தைகள் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு  உபயோக பொருட்கள் எரிந்து சேதமானது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து  ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது….

The post பர்னிச்சர் கடையில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: